உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / தனியார் வேலை வாய்ப்பு முகாம் பிப்., 14 ல் நடைபெறும்

தனியார் வேலை வாய்ப்பு முகாம் பிப்., 14 ல் நடைபெறும்

சிவகங்கை : சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பிப்.,14 அன்று வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும்.வேலை வாய்ப்பற்ற இளைஞர்களின் வேலை வாய்ப்பு மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், 2 அல்லது 3 வது வெள்ளியன்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படும். பிப்., 14 அன்று காலை 10:30 மணிக்கு தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும்.இதில் தனியார் நிறுவனங்கள் பங்கேற்று ஊழியர்களை தேர்வு செய்யலாம். இங்கு போட்டி தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்பு, உதவி தொகைக்கு விண்ணப்பிக்கலாம். இத்தனியார் வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்போருக்கு பதிவு மூப்பு ரத்து செய்யப்படமாட்டாது என தெரிவிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி