மேலும் செய்திகள்
தீர்ப்பாயம் உத்தரவை மதிக்காத சிவகங்கை நகராட்சி
23-Jul-2025
சிவகங்கை; சிவகங்கை சீனிவாசா நகரில் புதிதாக கட்டப்பட்ட உயரமான கழிவுநீர் கால்வாயால் பொதுமக்கள் அவதிபடுவதாக புகார் தெரிவிக்கின்றனர். சிவகங்கை - தொண்டி ரோட்டில் அமைந்துள்ளது சீனிவாசா நகர். இங்கு 8 குறுக்குத் தெருக்கள் உள்ளன. இப்பகுதியில் ரோடு அமைத்து கழிவுநீர் வாய்க்கால் அமைக்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர். தற்போது 6 வது குறுக்கு தெருவில் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி நடந்து வருகிறது. கழிவுநீர் கால்வாய் ரோட்டில் இருந்து ஒரு அடிக்கு மேல் உயரமாக அமைக்கப்பட்டுள்ளது. இதனால் டூவீலர், காரில் செல்ல சிரமப்படுவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். கால்வாய் உயர்த்தி கட்டப்பட்டுள்ளதால் வீடுகள் முன் மழை தண்ணீர் தேங்கும் சூழல் உள்ளது.
23-Jul-2025