உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / பசுமை வேலியிட்டு வயல்களுக்கு பாதுகாப்பு

பசுமை வேலியிட்டு வயல்களுக்கு பாதுகாப்பு

தேவகோட்டை: தேவகோட்டையில் பசுமையாய் வளர்ந்த நெற்பயிருக்கு வயல்களைச் சுற்றி பச்சை வண்ண வேலியிட்டு விவசாயிகள் பாதுகாக்கின்றனர். தேவகோட்டையை சுற்றி மழை தாமதமாக பெய்து தற்போது தான் நெற் பயிர் முளைக்க தொடங்கி உள்ளது. களைக்கொல்லி மருந்து அடித்தும், களைகள அகற்றும் பணி நடந்து வருகிறது. இருந்தபோதிலும் சில இடங்களில் மோட்டார் வைத்து இருப்பவர்கள் சரியான நேரத்தில் தண்ணீர் பாய்ச்சியதில் பயிர் நன்றாக முளைத்து வளர்ந்திருக்கிறது. இந்த சூழ்நிலையில் இந்த பகுதியில் மாடுகள் தொல்லை அதிகம் இருப்பதால் விவசாயம் பாதிக்கும் இல்லை தொடர்ந்து வருகிறது. எனவே விளைந்து வளர்ந்த பயிர்களை பாதுகாக்க வயல்களை சுற்றி முள்வேலி அமைத்து இருந்தாலும் துணிகளை கொண்டு பயிர்களை மறைத்து பாதுகாத்து வருகிறார்கள். பழைய சேலைகள் கட்டி பாதுகாத்து வந்த நிலையில் இப்பொழுது மறைக்கும் நீண்ட பச்சை துணியை சுற்றி கட்டி திரை போல் வேலிக்கு மேல் கட்டி பயிர்கள் வெளியே தெரியா வண்ணம் மாடுகள் பயிர்களுக்குள் தாவி குதித்து விடாமல் பயிர்களை மிகவும் பாதுகாப்பாக வளத்து வருகின்றனர். நெல் விதைத்து முளைக்கும் முன்பும் இதே நிலைதான். நெல் விதைகளை மயில்கள் கொத்தி சாப்பிட்டு விடும் நிலைமையும். நெல் பயிர் வளர்ந்து நெல் மணி களை கட்டாயம் உள்ளது. நெல் விதைத்தது முதல் அறுவடை செய்யும் வரை மழை மட்டும் இன்றி மாடுகள், மயில்களிலிடமிருந்தும் பாதுகாக்க வேண்டிய நிலைமையில் தேவகோட்டையை சுற்றி உள்ளது. சராசரியாக திரியும் மாடுகளை பராமரிக்க சிறுவாச்சி ரோட்டில் இருந்து சித்தானூர் செல்லும் சாலையில் கோசாலை அமைத்து ஒரு பயனும் இல்லாமல் இருக்கிறது. மாடுகளால் தொல்லை என தெரிந்தும் அதிகாரிகள் கோசாலையை பற்றி நினைப்பதே இல்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ