காரைக்குடியில் மறியல்
காரைக்குடி : காரைக்குடி கழனிவாசல் அருகே நேற்று 50க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.காரைக்குடி கழனிவாசல் பருப்பூரணி அருகே ஆதி திராவிட மக்களுக்கு ஒதுக்கப்பட்ட இடம் இருப்பதாக கூறி, 50க்கும் மேற்பட்டோர் வேலி அமைக்க முற்பட்டனர். வருவாய்த்துறையினர், ஊன்றிய கற்களை அப்புறப்படுத்த முயன்றனர். ஆத்திரமடைந்த ஆதிதிராவிட மக்கள் காரைக்குடி திருச்சி நெடுஞ்சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அரை மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டது. போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதனைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. வருவாய்த் துறையினர் கூறுகையில், சம்மந்தப்பட்ட இடத்திற்கு பட்டயம் இருப்பதாக தொடர்ந்து தெரிவிக்கின்றனர். ஆனால் அந்த பட்டயம் செல்லாது. அது அரசுக்கு சொந்தமான இடம் என்றனர்.