உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / சுந்தரராஜ பெருமாள் கோயிலில் புரட்டாசி முகூர்த்த கால் நடுதல் 

சுந்தரராஜ பெருமாள் கோயிலில் புரட்டாசி முகூர்த்த கால் நடுதல் 

சிவகங்கை : சிவகங்கை சுந்தரராஜ பெருமாள் கோயிலில் புரட்டாசி பிரமோத்ஸவ விழா நேற்று முகூர்த்தக்கால் நடுதலுடன் துவங்கியது. ஹிந்து அறநிலையத்துறைக்கு பாத்தியப்பட்ட இக்கோயிலில் நேற்று காலை 9:45 மணிக்கு முகூர்த்தக்கால் நட்டு புரட்டாசி சனி வார விழாவை துவக்கினர். ஸ்ரீதேவி, பூதேவியருடன் சுந்தரராஜ பெருமாள் வெள்ளிஅங்கியில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். புரட்டாசி விழாவை முன்னிட்டு தினமும் காலை 5:00 மணிக்கு திருமஞ்சனம், காலை 9:00 மணிக்கு சிறப்பு பூஜை நடைபெறும். ஒவ்வொரு சனி தோறும் மண்டகப்படிதாரர்கள் சார்பில் காலை திருமஞ்சனம், உற்சவ மூர்த்திக்கு அபிேஷக ஆராதனை நடைபெறும். இரவு ஸ்ரீதேவி, பூதேவியருடன் சுந்தரராஜ பெருமாள் வீதி உலா வருவார். புரட்டாசி சனியை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்குரிய ஏற்பாடுகளை நிர்வாகம் செய்து வருகிறது. விழா ஏற்பாட்டை அந்தந்த மண்டகப்படிதாரர்கள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை