முத்தனேந்தலில் மீண்டும் ரயில்வே ஸ்டேஷன்
மானாமதுரை: மதுரை-ராமேஸ்வரம் இடையே அகல ரயில் பாதை வருவதற்கு முன் முத்தனேந்தலில் ரயில்வே ஸ்டேஷன் செயல்பட்டு வந்தது. இங்கிருந்து 3 கி.மீ., தொலைவில் உள்ள சுற்றுலா தலமான இடைக்காட்டூரில் உள்ள திரு இருதய ஆண்டவர் சர்ச் மற்றும் இடைக்காடர் சித்தர் கோயில் உள்ளிட்டபல்வேறு இடங்களுக்கு ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து சென்றனர். அகல ரயில் பாதை அமைப்பதற்கு முன்பாகவே பல்வேறு காரணங்களை காட்டி ரயில்வே நிர்வாகம் முத்தனேந்தல் ரயில்வே ஸ்டேஷனை எடுத்து விட்டது. இப்பகுதி மக்கள் ரயில் வசதி இல்லாமல் சிரமப்பட்டு வருகின்றனர். கடந்த 15 வருடங்களுக்கும் மேலாக முத்தனேந்தலில் ரயில்வே ஸ்டேஷன் துவக்க வேண்டுமென்று மக்கள்பிரதிநிதிகளையும் ரயில்வே நிர்வாக அதிகாரிகளிடமும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.எனினும் இவர்களது கோரிக்கை இன்னும் நிறைவேற்றப்படவில்லை.