உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மழையால் சேதமான தரைப்பாலம்

மழையால் சேதமான தரைப்பாலம்

காரைக்குடி: அரியக்குடியில் தரைப் பாலம் தொடர் மழையால் முற்றிலும் சேதமடைந்து போக்குவரத்துக்கு பயனற்ற நிலையில் உள்ளது.அரியக்குடி ஊராட்சிக்குட்பட்ட வடக்கு தெருவில் தரைப்பாலம் உள்ளது. தற்போது பெய்த மழையால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக மழைநீர் இப்பாலத்தில் சென்றது. ஏற்கனவே பாலம் சேதமடைந்த நிலையில் தொடர் மழையால், அதிக அளவில் சென்ற தண்ணீர் காரணமாக முற்றிலும் சேதமடைந்துள்ளது. அரியக்குடி அரசுப் பள்ளி, உஞ்சனை, வேட்டைக்காரன் பட்டி செல்வோர் இச்சாலையை பயன்படுத்துகின்றனர். சேதம் அடைந்த சாலையில் இரவில் விபத்து ஏற்படுகிறது.ஊராட்சி தலைவர் சுப்பையா கூறுகையில்: தற்போது பெய்த தொடர் மழை காரணமாக பாலம் சேதமடைந்துள்ளது. என்.ஆர்.ஜி.எஸ்., திட்டத்தின் கீழ் பாலம் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென யூனியன் அலுவலகத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ