உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / பிரான்மலையில் மழை: விவசாயிகள் மகிழ்ச்சி

பிரான்மலையில் மழை: விவசாயிகள் மகிழ்ச்சி

சிங்கம்புணரி : சிங்கம்புணரி அருகே பிரான்மலை பகுதியில் நேற்று திடீர் மழை பெய்ததால் குறுவைப் பயிரிட்டவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.இத்தாலுகாவில் எஸ்.புதூர், கிருங்காக்கோட்டை, ஒடுவன்பட்டி, பிரான்மலை உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் பலர் குறுவை சாகுபடி செய்துள்ளனர். போர்வெல் மற்றும் கண்மாயில் எஞ்சிய நீரை நம்பி நெல் நடவுப்பணிகளை துவக்கினர். சில நாட்களாக வாட்டிய கடும் வெயில் காரணமாக பயிர்களில் வளர்ச்சி குறைவாகவே இருந்தது.நேற்று பிரான்மலை பகுதியில் திடீர் மழை பெய்தது. இதனால் குறுவை பயிரிட்டவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். அறுவடைக்கு முன்னர் இன்னும் ஒன்று இரண்டு அல்லது இரண்டு மழை பெய்தால் மகசூல் எதிர்பார்த்த அளவுக்கு கிடைக்கும் என விவசாயிகள் நம்புகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ