உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / காரங்காட்டில் மழை: பயணிகள் வருகை குறைவு

காரங்காட்டில் மழை: பயணிகள் வருகை குறைவு

திருவாடானை: தொண்டி அருகே காரங்காடு கடற்கரை சதுப்பு நிலக்காடுகளை உள்ளடக்கி அமைந்துள்ளது. இயற்கை தந்த கொடையாக மனதை கவரும் வகையில் மாங்குரோவ் காடுகள் அடர்த்தியாக உள்ளன. இப்பகுதி சுற்றுலா தலமாக அறிவிக்கபட்டுள்ளது. பயணிகளை கடலுக்குள் சென்று சுற்றி காட்டுவதற்காக வனத்துறையினர் சார்பில் படகு சவாரி, கயாக்கிங் எனப்படும் துடுப்பு சவாரி ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.அலையாத்தி காடுகளுக்கு இடையே செல்லும் போது பறவைகளை கண்டுரசிக்கலாம். விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில் ஏராளமான வெளியூர் பயணிகள் வருகின்றனர்.இந்நிலையில் ஆயுதபூஜையை முன்னிட்டு தொடர்விடுமுறையாக இருந்த போதும் மழையால் சுற்றுலா பயணிகள் வருகை குறைவாக இருந்தது. வெறிச்சோடி காணப்பட்டது. ஒரு படகு மட்டும் இயங்கியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ