மேலும் செய்திகள்
வட்டார அளவில் வானவில் மன்ற போட்டி
10-Nov-2024
ஆய்வு கட்டுரை சமர்ப்பிக்கும் போட்டி
08-Nov-2024
சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 12 ஒன்றியங்களிலும் வானவில் மன்ற போட்டிகள் நடந்தது.முதல் மூன்று இடம் பெற்ற 36 பள்ளிகளின் 108 மாணவர்கள் அறிவியல் ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கும் போட்டியில் பங்கேற்றனர்.முதன்மைக் கல்வி அலுவலர் பாலுமுத்து தலைமை வகித்தார். மாவட்ட திட்ட அலுவலர் பீட்டர் லெமாயூ முன்னிலை வகித்தார். வானவில் மன்ற மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சகாய பிரிட்டோ வரவேற்றார். ஆறுமுகம் பிள்ளை சீதையம்மாள் கல்லுாரி முன்னாள் துணை முதல்வர் கோபிநாத், மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் முதுநிலை விரிவுரையாளர் சேவற்கொடியோன், சேவுகன், அண்ணாமலை, கண்ணன் நடுவர்களாக இருந்து கட்டுரைகளை மதிப்பாய்வு செய்தனர். மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.வானவில் மன்ற அமைப்புசார் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆரோக்கியசாமி நன்றி கூறினார்.
10-Nov-2024
08-Nov-2024