உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை /  வானவில் மன்ற போட்டி

 வானவில் மன்ற போட்டி

சிவகங்கை: காளையார்கோவிலில் வானவில் மன்றம் சார்பில் போட்டிகள் பள்ளி மாணவர்களுக்கு வட்டார வளமைய கூட்டரங்கில் நடந்தது. வட்டார வளமைய மேற்பார்வையாளர் கஸ்துாரிபாய் தலைமை வகித்தார். வட்டாரக் கல்வி அலுவலர்கள் பால்ராஜ், லதாதேவி, பொன்னி முன்னிலை வகித்தனர். வானவில் மன்ற மாவட்ட இணை ஒருங்கிணைப் பாளர் ஆரோக்கியசாமி உலகளாவிய சவால்களுக்கு உள்ளூர் அளவிலான அறிவியல் தீர்வுகள் தலைப்பில் அறிவியல் ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பிப்பது குறித்து பேசினார். அரசு நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை பள்ளி களில் பயிலும் 6,7,8 வகுப்பு மாணவர்கள் தங்களின் அறிவியல் ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்தனர். ஆசிரியர்கள் சகாய செல்வி, வினோ, மணிமேகலை நடுவர்களாக செயல் பட்டனர். வெற்றி பெறும் மாணவர்கள் நவ.24 சிவகங்கையில் நடை பெறும் மாவட்ட அள விலான போட்டிகளில் பங்கேற்க உள்ளனர். ஆசிரியர் பயிற்றுநர்கள் மார்க்ரேட் சித்திக் பாத்திமா, இளங்கதிர்செல்வி, சத்தியமூர்த்தி, கார்த்திக் உள்ளிட்டோர் போட்டிக்கான ஏற்பாடுகளை செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !