உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மத நல்லிணக்க மீலாது விழா பழ. கருப்பையா எச்சரிக்கை

மத நல்லிணக்க மீலாது விழா பழ. கருப்பையா எச்சரிக்கை

காரைக்குடி: காரைக்குடியில் உள்ள நகரத்தார் வீட்டில் மீலாது விழா நடந்தால் எனது தலைமையில் தேவாரம், திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி நடக்கும் என பழ. கருப்பையா தெரிவித்தார். காரைக்குடியில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: காரைக்குடி கண்டனூர் ரோட்டில் நகரத்தார் சமுதாயத்தினர் சிலரின் பூர்வீக வீடு உள்ளது. இந்த வீட்டில் 'டிவி' தொகுப்பாளர் கரு.பழனியப்பன் தலைமையில் மத நல்லிணக்க மீலாது விழா நடைபெறும் என்றும் அமைச்சர் தங்கம் தென்னரசு உட்பட அமைச்சர்கள் கலந்து கொள்வதாகவும் அறிவிக்கப்பட்டுஉள்ளது. இதே வீட்டின் உரிமை குறித்து சின்ன ஆறுமுகம் தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இந்நிலையில் அங்கு மீலாது விழா அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மதப்பிரச்னை ஏற்பட கூட வாய்ப்பு உண்டு. போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. விழா நடந்தால் சின்ன ஆறுமுகம் மற்றும் எனது தலைமையில் அதே இடத்தில் தேவாரம் முற்றோதல் நிகழ்ச்சி நடக்கும். இவ்வாறு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை