குடியிருப்பு இல்லாத மதகுபட்டி போலீசார்
சிவகங்கை: மதகுபட்டி போலீசாருக்கு மதகுபட்டியில் காவலர் குடியிருப்பு இல்லாததால் வாடகை வீடுகளில் தங்கும் சூழல் ஏற்படுவதாக தெரிவிக்கின்றனர்.மதகுபட்டி போலீஸ் ஸ்டேஷன் கட்டுப்பாட்டில்79க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. சிவகங்கை தாலுகா இன்ஸ்பெக்டர் தலைமையில் 3 எஸ்.ஐ., 4 சிறப்பு எஸ்.எஸ்.ஐ., 29 போலீசார் பணிபுரிகின்றனர். இவர்கள் தங்க மதகுபட்டியில் குடியிருப்பு இல்லை. இங்கு பணிபுரியும் போலீசார் அனைவரும் சிவகங்கையில் இருந்தோ அல்லது மதகுபட்டியில் வாடகைக்கு தான் தங்களது குடும்பத்துடன் குடியிருந்து வருகின்றனர். வெளியூரில் தங்கியிருந்து தினமும் பணிக்கு வருவதில் சிரமம் இருப்பதாக கூறுகின்றனர். போலீஸ் ஸ்டேஷன் அருகே போலீசார் குடும்பத்தோடு வசிப்பதற்கு புதிய காவலர் குடியிருப்பு கட்டித்தர எஸ்.பி., நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீசார் எதிர்பார்க்கின்றனர்.