உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / திருப்புத்துார் டூ கல்லல் ரயில்வே ஸ்டேஷனுக்கு நேரடி ரோடு வசதி அமைக்க கோரிக்கை

திருப்புத்துார் டூ கல்லல் ரயில்வே ஸ்டேஷனுக்கு நேரடி ரோடு வசதி அமைக்க கோரிக்கை

திருப்புத்துார்: திருப்புத்துாரிலிருந்து கல்லல் ரயில்வே ஸ்டேசனுக்கு நேரடி இருவழி சாலை வசதி ஏற்படுத்த திருப்புத்தூர் பகுதி ரயில் பயணிகள் எதிர்பார்க்கின்றனர். தற்போது திருப்புத்துார் பகுதி ரயில் பயணிகள் காரைக்குடி, தேவகோட்டை ரஸ்தா, திருச்சி,மதுரை சென்று ரயில் ஏறுகின்றனர். இதற்கு பயண தூரம் அதிகம் என்பதால் 17 கி.மீ. தொலைவிலுள்ள கல்லல் ரயில்வே ஸ்டேஷனை பயன்படுத்த பொதுமக்கள் விரும்புகின்றனர். ஆனால் அதற்கேற்ப விரைவு இருவழிச் சாலை இல்லை. தற்போது திருப்புத்தூரிலிருந்து கண்டரமாணிக்கம் வரை இருவழிச்சாலை உள்ளது. கண்டரமாணிக்கத்தில் இருந்து பொன்னாங்குடி, கள்ளிப்பட்டு, புரண்டி வழியாக கல்லல் ரயில்வே ஸ்டேஷன் வரை இருவழிச் சாலையாக மேம்படுத்த வேண்டும். ரோடு, பாலம் மேம்பாட்டிற்கு நிதி அனுமதியும், கல்லல் ரயில்வே ஸ்டேசன் வழியாக செல்லும் அனைத்து ரயில்களும் குறிப்பிட்ட நேரம் நின்று செல்லும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம் திருப்புத்தூர் பயணிகள் ரயில் பயணத்திற்கு விரைவாக கல்லல் செல்ல முடியும். திருப்புத்தூர் ரயில் பயணிகளுக்கு எளிதாக பயணம் செய்யும் வாய்ப்பு உருவாகும். கல்லல் நகராக வளர்ச்சி பெறும் வாய்ப்பும் உருவாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !