உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மானாமதுரை கடற்பாசி கம்பெனி சீல் வருவாய்துறை நடவடிக்கை

மானாமதுரை கடற்பாசி கம்பெனி சீல் வருவாய்துறை நடவடிக்கை

மானாமதுரை: மானாமதுரை சிப்காட் வளாகத்தில் செயல்பட்டு வரும் தனியார் கடற்பாசி கம்பெனி கழிவுகளை தனியார் இடத்தில் எரித்ததை தொடர்ந்து அக்கம்பெனியை வருவாய்துறை அதிகாரிகள் சீல் வைத்து மூடினர். மானாமதுரையில் கடந்த 20 ஆண்டாக தனியார் கடற்பாசி தயாரிப்பு கம்பெனி செயல்படுகிறது. இங்கு மானாமதுரை மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த 200க்கும் மேற்பட்டோர் வேலை பார்க்கின்றனர். இங்கு கடற்பாசிகளை கொண்டு ஏராளமான பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. இந்த கம்பெனி கழிவுகளை சிமென்ட் கம்பெனி செயல்பட்ட தனியார் இடத்தில் கொட்டி தீவைத்து எரித்தனர். இதனால் அப்பகுதியில் புகை மூட்டம் ஏற்பட்டது. மேலும் துார்நாற்றத்தால் 5 கி.மீ., சுற்றளவிற்கு மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இது குறித்து தாசில்தார், சிப்காட் போலீசில் புகார் அளித்தனர். இதையடுத்து நேற்று தாசில்தார் கிருஷ்ணகுமார் தலைமையில் வருவாய், போலீஸ் உள்ளிட்டோர் சென்று நேரடி விசாரணை நடத்தினர். தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டு, தீயை அணைத்தனர். பின்னர் தாசில்தார் தலைமையிலான அதிகாரிகள் கடற்பாசி கம்பெனிக்கு சீல்' வைத்து சென்றனர். இது குறித்து கடற்பாசி கம்பெனி ஊழியர்கள் கூறியதாவது, கம்பெனியிலிருந்து கழிவுகளை எடுத்துச் சென்ற ஒப்பந்ததாரர் எங்களுக்குத் தெரியாமல் தீ வைத்துள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி