உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / அரசு புறநகர் பஸ்களில் ரிவர்ஸ் கேமரா பொருத்தம்

அரசு புறநகர் பஸ்களில் ரிவர்ஸ் கேமரா பொருத்தம்

மானாமதுரை : தமிழகத்தில் தற்போது புதிதாக ஓடும் அரசு புறநகர் பஸ்களில் டிரைவர்களின் வசதிக்காக ரிவர்ஸ் கேமரா பொருத்தப்பட்டுள்ளது.தமிழகத்தில் அரசு போக்குவரத்துக் கழக கும்பகோணம் கோட்டத்தில் ஓடும் புறநகர் பஸ்கள் மிகவும் பழுதடைந்து நடுவழியில் ஆங்காங்கே நின்று வருவதால் பயணிகள் அவதிக்குள்ளாகி வந்தனர். மேலும் டிரைவர் மற்றும் கண்டக்டர்களும் பழுதான பஸ்களை வைத்துக் கொண்டு ஓட்ட முடியாமல் மிகுந்த சிரமப்பட்டு வந்தனர்.இதையடுத்து அரசு தற்போது ஏராளமான புதிய பஸ்களை அந்தந்த கோட்டங்களுக்கு வழங்கி போக்குவரத்து நடைபெற்று வருகிறது.கும்பகோணம் கோட்டத்தில் இயக்கப்படும் புதிய தொலை துார பஸ்களில் தற்போது நவீன வசதியாக ரிவர்ஸ் கேமரா பொருத்தப்பட்டு அதன் டிஸ்பிளே டிரைவர் சீட்டுக்கு முன்புறம் அமைத்து பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.மேலும் தானியங்கி கதவு பொருத்தப்பட்டு கதவு திறக்கும் போதும் மூடும் போதும் கம்ப்யூட்டர் வாய்ஸ் மூலம் கதவு திறக்கப்படுகிறது, மூடப்படுகிறது என தமிழிலும், ஆங்கிலத்திலும் அறிவிக்கப்படுகிறது.படிகளில் பயணிகள் நின்று பயணம் செய்தால் அதனையும் கம்ப்யூட்டர் வாய்ஸ் எச்சரித்து படியில் நிற்க வேண்டாம் என கூறி வருகிறது.டிரைவர்கள், கண்டக்டர்கள் கூறியதாவது: பஸ்களை நிறுத்தும் இடங்களிலும் பின்னால் எடுக்கும் போதும் கண்டக்டர் இருந்தாலும் ஒரு சில நேரங்களில் விபத்து ஏற்பட்டு விடுகிறது. தற்போது ரிவர்ஸ் கேமரா பொருத்தப்பட்டு டிஸ்பிளே முன்புறம் வைக்கப்பட்டுள்ளதால் அதன் மூலம் துல்லியமாக பின்னால் இருக்கும் வாகனங்கள் மற்றும் நடந்து செல்பவர்களை பார்த்து பஸ்களை இயக்க உதவியாக உள்ளது என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை