உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை /  ரோட்டில் கொட்டப்பட்ட ஆற்று மணல்

 ரோட்டில் கொட்டப்பட்ட ஆற்று மணல்

கீழடி: கீழடி அருகே நான்கு வழிச்சாலையில் குவித்து வைக்கப்பட்ட ஆற்று மணல் குறித்து கேட்ட போது அதிகாரிகள் அரசு கட்டட பணிக்காக கொண்டு வரப்பட்ட மணல் என சமாளித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தென் மாவட்டங்களில் ஆற்று மணல் குவாரியே கிடையாது. கட்டுமான பணிகளுக்கு எம் சாண்ட் மணலே பயன்படுத்தப்படுகிறது. இந்நிலையில் நேற்று காலை மதுரை - பரமக்குடி நான்கு வழிச்சாலையில் கீழடி விலக்கு அருகே ஆறு யூனிட் ஆற்று மணல் கிடந்தது. மணலுக்கு யாரும் சொந்தம் கொண்டாடாத நிலையில் வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். தாசில்தார் ஆனந்தபூபாலன் தலைமையில் வருவாய்த்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். ஆற்று மணல் கிடந்தது குறித்து கேட்டபோது கீழடி விலக்கில் உயர்மட்ட பாலம் கட்டுமான பணி நடப்பதால் சோதனைச்சாவடி இங்கு அமைக்கப்பட உள்ளது. அதற்காக ஒப்பந்தகாரர் மணல் கொண்டு வந்து கொட்டியிருக்கலாம், என்றனர். சோதனைச்சாவடி கட்டுமான பணிகள் அஸ்திவாரம் தோண்டப்பட்டதுடன் சரி அதற்கு பின் பணிகள் மேற்கொள்ளப்படாமல் கிடப்பில் போடப்பட்டு விட்டது. கட்டுமான பணியாக இருந்தாலும் எம் சாண்ட் தான் பயன்படுத்த முடியும் ஆற்று மணல் பயன்படுத்த முடியாது, திருப்புவனம் வைகை ஆற்றுப்படுகையில் கானூர் தடுப்பணை பணிகளுக்கு கூட பொதுப்பணித்துறையினர் எம் சாண்ட் தான் பயன்படுத்தி வந்தனர். அப்படியிருக்கையில் நான்கு வழிச்சாலையை ஒட்டி ஆறு யூனிட் மணல் கிடப்பது சர்ச்சையான நிலையில் அதிகாரிகள் அதனை சமாளித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ