அண்டக்குடியில் புதிதாக கட்டிய ரேஷன் கடை கூரை பூச்சு சேதம்
இளையான்குடி: இளையான்குடி அருகே உள்ள அண்டக்குடி கிராமத்தில் கட்டி முடிக்கப்பட்ட 2 மாதத்திலேயே கூரை பூச்சு கீழே விழுந்த நிலையில் உடனடியாக அதனை சரி செய்தனர். இளையான்குடி ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட என். அண்டக்குடி ஊராட்சிக்குட்பட்ட அண்டக்குடி கிராமத்தில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.12.30 லட்சம் செலவில் புதிதாக ரேஷன் கடை கட்டுமான பணி கடந்த மாதங்களுக்கு முன் முடிவடைந்து ரேஷன் கடை அங்கு மாற்றப்பட்டது. இந்நிலையில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு ரேஷன் கடையின் முன்புறம் உள்ள கூரை பூச்சு கீழே உதிர்ந்து விழுந்தது. அப்போது ரேஷன் கடைக்கு விடுமுறை நாள் என்பதால் மக்கள் யாரும் இல்லாத காரணத்தினால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதையடுத்து கிராம மக்கள் உடனடியாக புகார் தெரிவித்ததை தொடர்ந்து உதிர்ந்து விழுந்த கூரை பூச்சை சரி செய்து பூச்சு உதிர்ந்தது கீழே விழுந்தது தெரியாமல் இருப்பதற்காக மீண்டும் வர்ணம் பூசியுள்ளனர்.