உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / பிள்ளையார்பட்டி கோவிலில் ரூ.1.71 கோடி கையாடல்

பிள்ளையார்பட்டி கோவிலில் ரூ.1.71 கோடி கையாடல்

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவில் டிரஸ்ட்டில், தற்போது பொறுப்பாளர்களாக இருப்பவர்கள் குமரப்பன், 68, பழனியப்பா, 69. இந்த டிரஸ்டில், 2022- - -23ல் சாமிநாதன், தண்ணீர்மலையு; 2023- - 24ல் எஸ்.பி.முத்துராமன், பேயப்பன் ஆகியோர் பொறுப்பாளர்களாக இருந்துள்ளனர். மதுரையில் உள்ள டிரஸ்டிற்கு சொந்தமான இடத்தை மீட்டு ஒப்படைக்க எஸ்.பி., முத்துராமன், பேயப்பன், அருணாச்சலம், சாமிநாதன், தண்ணீர்மலை, நாராயணன் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். குமரப்பன், பழனியப்பன் மதுரை சொத்து மீட்பு சம்பந்தமாக செலவு கணக்கை ஆய்வு செய்தனர். அதில், 1 கோடியே 36 லட்சத்து 41,௦௦௦ ரூபாய் பாலமுருகன் என்பவருக்கு பட்டுவாடா செய்துள்ளனர். மேலும், எவ்வித ரசீதுகளும் இன்றி, 33 லட்சத்து 63,400 ரூபாய் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து எஸ்.பி.முத்துராமன், பேயப்பன், அருணாச்சலம், சாமிநாதன், தண்ணீர்மலை, நாரயணன், பாலமுருகன் உள்ளிட்ட, ஏழு பேர் டிரஸ்ட்க்கு சொந்தமான, 1 கோடியே 71 லட்சத்து 23,௦௦௦ ரூபாயை கையாடல் செய்துள்ளதாக குமரப்பன், பழனியப்பா ஆகியோர் புகார் அளித்தனர். ஏழு பேர் மீது வழக்குப்பதிந்து போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Ram pollachi
நவ 11, 2025 13:09

ஒரு குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்த மக்கள் மிகவும் கண்ணியமாகவும், பயபக்தியுடன் பிறர் பார்த்து பொறாமை கொள்ளும் வகையில் கோவிலை நிர்வகித்து வருகிறார்கள். வேலையை விட்டுவிட்டு கற்பக விநாயகர் சாமிக்கு பாடுபடுகிறார்கள் சாப்பிட்டு போகட்டும் மேலும் உங்களின் சமூகம் தானே சொல்லி புரிய வைக்கவும் இல்லை என்றால் நிர்வாக பொறுப்பில் இருந்து ஒதுக்கி விடுங்கள் அதை விட்டுவிட்டு போலீஸ், நீதிமன்றம் என்று ஓடினால் இந்து சமய அறநிலையத் துறை உள்ளே புகுந்தது அனைத்து வளங்களையும் ஏப்பம் விட்டுவிடும்.. போனது போகட்டும் என்று நீங்களே விட்டு கொடுத்து பாரம்பரிய தர்மங்களை தொடர்ந்து காப்பாற்ற அந்த பிள்ளையார்பட்டி இறைவன் அருள் புரியட்டும்...


அப்பாவி
நவ 11, 2025 12:33

துட்டு புரளும் இடமாயிருந்தா ...


புதிய வீடியோ