உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / கலர் கோலப்பொடி விற்பனை

கலர் கோலப்பொடி விற்பனை

காரைக்குடி: காரைக்குடியில், மார்கழி தொடங்க உள்ளதையொட்டி, கலர் கோலப்பொடி விற்பனை சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.மார்கழியில் பெண்கள் அதிகாலையில் எழுந்து வீட்டு வாசலில் கோலமிட்டு, சாணத்தில் பிள்ளையார் பிடித்து வழிபடுவது வழக்கம். மார்கழி தொடங்குவதையடுத்து கலர் கோலப்பொடி விற்பனை சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. காரைக்குடி நகரின் பல பகுதிகளிலும் வியாபாரிகள் தற்காலிக கடைகள் அமைத்து கலர் கோலப்பொடி விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர். 200.கி கலர் கோலப்பொடி ரூ.10 லிருந்து 15 வரை விற்பனை செய்யப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை