உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / பிளஸ் 1 தேர்வு முடிவில் சாம்பவிகா பள்ளி சாதனை

பிளஸ் 1 தேர்வு முடிவில் சாம்பவிகா பள்ளி சாதனை

சிவகங்கை : சிவகங்கை அருகே ராகிணிபட்டி சாம்பவிகா மேல்நிலை பள்ளி பிளஸ்1 மாணவர்கள் தேர்வு முடிவில் முதல் மூன்று இடம் பிடித்து சாதனை புரிந்த மாணவர்களை பள்ளி செயலர் ஏ.எம்., சேகர் பாராட்டினார். இப்பள்ளியில் பிளஸ் 1 தேர்வு எழுதிய 215 மாணவர்களும் தேர்ச்சி பெற்று, 100 சதவீத தேர்ச்சியை இப்பள்ளி மாணவர்கள் பெற்றனர். மாணவி அக்சயாஸ்ரீ 600க்கு 589, மாசிலா ஏஞ்சலின் 584,சீதாலட்சுமி 580 மதிப்பெண் பெற்று முதல் 3 இடங்களை பிடித்தனர்.இப்பள்ளியில் தமிழில் 3 பேர் 99 மதிப்பெண், ஆங்கிலத்தில் இருவர் 98, இயற்பியலில் இருவர் 99, வேதியியலில் ஒருவர் 98, கணிதத்தில் ஒருவர் 98, உயிரியியலில் ஒருவர் 97, தாவரவியலில் ஒருவர் 96, விலங்கியலில் ஒருவர் 96, கம்ப்யூட்டர் சயின்சில் ஒருவர் 100, கணிணி பயன்பாடு பாடத்தில் ஒருவர் 100, கணக்கு பதிவியலில் ஒருவர் 94, பொருளியலில் ஒருவர் 99, வணிகவியலில் ஒருவர் 100 மதிப்பெண்களை பெற்றுள்ளனர். மாணவர்களுக்கான பாராட்டு விழாவில் தலைமை ஆசிரியர் தியாகராஜன், பொறுப்பாசிரியர்கள் சந்திரசேகர், சுரேஷ்குமார், உடற்கல்வி ஆசிரியர் தடியப்பன், ஆசிரியர் சக்திவேல் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ