உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / துாய்மை பணியாளர்கள் பட்டா கேட்டு போராட்டம்  

துாய்மை பணியாளர்கள் பட்டா கேட்டு போராட்டம்  

சிவகங்கை: காளையார்கோவிலில் துாய்மை பணியாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட இலவச வீட்டு மனையை ஒப்படைக்க வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம் நடத்தினர். காளையார்கோவிலில் வசிக்கும் துாய்மை பணியாளர்கள் 69 பேருக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க 2.5 ஏக்கர் வரை ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் 1997 ம் ஆண்டு சோமநாதமங்கலம் குரூப்பில் நிலம் ஒதுக்கீடு செய்தனர். அந்த இடத்தை வழங்குவதில் சிரமம் ஏற்பட்டது. இதனால் துாய்மை பணியாளர்கள் அனைவருக்கும் மாற்று இடம் தரப்படும் என வருவாய்துறையினர் உறுதி அளித்தனர். தொடர்ந்து 27 ஆண்டாக மாற்று இடம் வழங்காமல் இழுத்தடித்து வந்தனர். நேற்று காலை பல்வேறு அமைப்புகள், சர்வ கட்சியினர் சார்பில் சோமநாதமங்கலத்தில் குடியேறும் போராட்டம் நடத்தினர். காளையார்கோவில் தாசில்தார் லெனின், ஆதிதிராவிடர் நல தாசில்தார் வெங்கடேஷ், மண்டல துணை தாசில்தார் தர்மராஜ், இன்ஸ்பெக்டர் சரவணபோஸ் உள்ளிட்டோர் பேச்சு வார்த்தை நடத்தினர். மாற்று இடம் பெறுவதற்கான அரசாணையை வெளியிடுமாறு ஆதிதிராவிடர் நல செயலருக்கு ஒப்புதல் கடிதம் அனுப்பியுள்ளோம். இரண்டு மாதத்திற்குள் அரசாணை பெற்றவுடன், மாற்று இடத்தில் இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்படும் என உறுதி அளித்தனர். இதையடுத்து காத்திருப்பு போராட்டத்தை கைவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை