உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / துாய்மை பணியாளர்கள் சிவகங்கையில் ஆர்ப்பாட்டம்

துாய்மை பணியாளர்கள் சிவகங்கையில் ஆர்ப்பாட்டம்

சிவகங்கை: சிவகங்கை கலெக்டர் அலுவலகம் முன்பு திருப்புத்துார் ரோட்டில் நகராட்சி, ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை ஊழியர் சங்க சி.ஐ.டி.யூ., சார்பில் துாய்மை பணியாளர்கள் கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாநிலத் துணைத் தலைவர் வீரையா தலைமை வகித்தார். மாவட்ட பொதுச் செயலாளர் முருகானந்தம், மாவட்டச் செயலாளர் சி.ஐ.டி.யூ., சேதுராமன், மாவட்ட தலைவர் உமாநாத், மாவட்ட துணைச் செயலாளர் வேங்கையா முன்னிலை வகித்தனர். நகராட்சி கிளை நிர்வாகிகள் தங்கராஜ், ஆறுமுகம், கணேசன், ஜான், ராஜேந்திரன் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் துாய்மைப்பணி உள்ளிட்ட அடிப்படை பணிகளை தனியார்மயமாக்கும் அரசாணை 10, 139,152 உத்தரவை ரத்து செய்ய வேண்டும். புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். அனைத்து நகராட்சிகளிலும் அவுட்சோர்சிங் முறையில் பணிசெய்து வரும் துாய்மை பணியாளர்கள் உள்ளிட்ட அனைத்து பிரிவு தொழிலாளர்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ