உள்ளூர் செய்திகள்

பள்ளி ஆண்டு விழா..

சிவகங்கை: சிவகங்கை சக்கந்தி அரசு மேல்நிலைப்பள்ளி ஆண்டு விழா, விளையாட்டு விழா நடந்தது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலுமுத்து தலைமை வகித்தார். மாவட்டக் கல்வி அலுவலர் மாரிமுத்து முன்னிலை வகித்தார். உதவி தலைமையாசிரியர் இளங்கோவன் வரவேற்றார். தலைமையாசிரியர் அருள்ராஜ் ஆண்டறிக்கையை வாசித்தார். கலைத்திறன் மற்றும் தனித்திறன் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. முன்னாள் ஊராட்சி தலைவர் கோமதி, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பத்மாவதி கலந்து கொண்டனர். ஆசிரியர் மாலதி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை