உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை /  அறிவியல் கண்காட்சி

 அறிவியல் கண்காட்சி

திருப்புத்துார்: கீழச்சிவல்பட்டி மீனாட்சி சுந்தரேஸ்வரர் மேல்நிலைப்பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடந்தது. பள்ளித்தலைவர் லெட்சுமணன் தலைமை வகித்தார். செயலர் அழகுமணிகண்டன், பொருளாளர் அங்கப்பன் முன்னிலை வகித்தனர். தலைமையாசிரியர் கமலம் வரவேற்றார். சண்முகநாதன் பொறியியல் கல்லூரி முதல்வர் முத்துராம் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். மாணவ, மாணவியரின் அறிவியல் படைப்புகளை காட்சிப்படுத்தி பார்வையாளர்களுக்கு விளக்கினர். பேராசிரியர் கருப்பையா, கல்விக்குழு உறுப்பினர் காசிவிஸ்வநாதன்,கலாசாலை பள்ளித் தலைமையாசிரியை வள்ளியம்மை வாழ்த்தினர். ஆசிரியர் வீரபத்திரன் ஒருங்கிணைத்தார். உதவி தலைமையாசிரியர் தங்கராசு நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !