உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / சாரண இயக்க பயிற்சி முகாம்

சாரண இயக்க பயிற்சி முகாம்

காரைக்குடி : காரைக்குடி அழகப்பா மாதிரி மேல்நிலை பள்ளியில் 3 நாட்கள் சாரண இயக்கம் சார்பில் ராஜ்ய புரஸ்கார் முகாம் நடைபெற்றது.தேவகோட்டை கல்வி மாவட்ட செயலாளர் கண்ணன், மாவட்ட தலைவர் கோவிந்தராமானுஜம், பொருளாளர் சேதுராமன் முன்னிலை வகித்தனர்.அழகப்பா பல்கலை துணைவேந்தர் ஜி.ரவி சிறப்பு வகித்தார். சிவகங்கை முதன்மை கல்வி அலுவலர் பாலுமுத்து, மாவட்ட கல்வி அலுவலர் உதயகுமார் பங்கேற்றனர். சாரண இயக்க கவுரவ தலைவர் கண்ணப்பன், செயலாளர் முத்துக்குமரன், பொருளாளர் நாகராஜன், அமைப்பு ஆணையர் நரசிம்மன் பங்கேற்றனர்.சாரண இயக்கத்தை சேர்ந்த 127 வீரர்கள் பங்கேற்றனர்.பயிற்சியாளர்கள் எபினேச சந்திரகாசன், சண்முகநாச்சியார், வன்னிசெல்வம் ஆகியோர் பயிற்சி அளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி