சுத்திகரிப்பு நிலைய கழிவுநீர் தேனாற்றில் கலப்பு
காரைக்குடி: காரைக்குடியில் கழிவுநீர்சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து வெளியேறும் கழிவுநீர் தேனாற்றில்கலப்பதாக விவசாயிகள் புகார் கூறுகின்றனர்.காரைக்குடியில் 2017ம் ஆண்டு ரூ.112.5 கோடியில் பாதாளச்சாக்கடை திட்டம் தொடங்கப்பட்டது. கழிவு நீரை சுத்திகரிக்க, தேவகோட்டை ரஸ்தா பகுதியில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.2023ம் ஆண்டு பாதாள சாக்கடை திட்ட தொடக்க விழா நடந்தது. அமைச்சர் கே.என். நேரு தொடங்கி வைத்தார். காரைக்குடி மாநகராட்சியில் இருந்து நாள் ஒன்றுக்கு 6 எம்.எல்.டி., கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு வருகிறது. தவிர செப்டிக் டேங்க் கழிவு லாரிகள் மூலம் கழிவு நீர் இங்கு கொண்டு வந்து கொட்டப்படுகிறது. கழிவு நீர் சுத்திகரிக்கப்பட்டு, நன்னீரானது அருகிலுள்ள தேனாற்றில் விடப்படுகிறது. கழிவுநீராக வெளியேற்றம்
சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து கழிவுநீர் சுத்திகரிக்கப்படாமல் தற்போது கழிவுநீராகவே வெளியேறுவதாக புகார் எழுந்துஉள்ளது. துர்நாற்றத்துடன் கூடிய சாக்கடை கழிவுநீர் தேனாற்றில் கலப்பதால், விவசாயம் பாதிப்படைய வாய்ப்புள்ளதாக விவசாயிகள் புகார் தெரிவித்து வருகின்றனர்.அதிகாரிகள் கூறுகையில், காரைக்குடி மாநகராட்சியில் சேகரமாகும், கழிவுநீர் சுத்திகரிக்கப்பட்டு நன்னீராக தேனாற்றில் விடப்படுகிறது. கழிவுநீராக வெளியேறுவது குறித்து, முறையாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.