மழை பெய்தால் தேங்கும் கழிவுநீர்
சிங்கம்புணரி: சிங்கம்புணரியில் பள்ளி முன் மழைக்காலங்களில் தேங்கும் கழிவுநீரால் மாணவர்கள் அவதிப்படுகின்றனர்.இப்பேரூராட்சியில் உள்ள அரசு தொடக்கப் பள்ளி எண் 2, முன்பாகசெல்லும் மழைநீர் கால்வாய் பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் சேதமடைந்துள்ளது. மழைக்காலங்களில் தெருக்களில் இருந்து ஓடிவரும் கழிவுநீர் இப்பள்ளி முன் தேங்கி கழிவுநீர் குட்டை போல் காட்சி அளிக்கிறது. மாணவர்கள் முழங்கால் அளவு கழிவுநீரில் பள்ளிக்கு சென்று, வர வேண்டி உள்ளது.மழைக்காலங்களில் மாணவர்கள் அவதிக்கு உள்ளாகின்றனர். இப்பள்ளியில் மாணவர்களுக்கான கழிப்பறை வசதி போதுமானதாக இல்லை. ஒரு கழிப்பறையின் சுவர் மழையில் கரைந்து எப்போது வேண்டுமானாலும் விழலாம் என்று ஆபத்தானநிலையில் உள்ளது. எனவே பள்ளி முன்பாக கழிவு நீர் கால்வாயை சீரமைத்து, கூடுதல் கழிப்பறை கட்ட பெற்றோர்கள் வலியுறுத்தி உள்ளனர்.