மேலும் செய்திகள்
அஸ்வகந்தா பால் விற்க ஆவின் திட்டம்
16-Sep-2024
காரைக்குடி: காரைக்குடி ஆவின் நிறுவனம் முன்பு, திருவெற்றியூரில் ஒரே இடத்தில் இரண்டு ஆவின் விற்பனை நிலையம் அமைத்துள்ளதாக கூறி முற்றுகைப் போராட்டம் நடந்தது.ராமநாதபுரம் மாவட்டம் திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோயில் அருகே ஒரே இடத்தில் இரண்டு ஆவின் பால் விற்பனை நிலையம் அமைத்து ஒரு தலைப்பட்சமாக ஆவின் நிறுவனம் செயல்படுவதாக கூறி இந்து மக்கள் நல இயக்கம், இந்து ஜனநாயக பேரவை சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.பாதிக்கப்பட்ட சுசி கூறுகையில்: திருவாடானை தாலுகா திருவெற்றியூரில் முறையாக உரிமம் பெற்று பால் விற்பனை செய்து வருகிறேன். இதற்கு முன்பு இங்கு பால் விற்பனை செய்தவர் விற்பனை நிலையத்தை மூடி விட்டு சென்றுவிட்டார். அவரது ஆர்டரை முறையாக கேன்சல் செய்யாமல் எனக்கும் ஆவின் விற்பனை உரிமத்தை வழங்கி உள்ளனர். விற்பனையகத்தை விட்டுச் சென்றவர் மீண்டும் எனது ஆவின் நிலையத்தின் அருகிலேயே விற்பனை செய்கிறார். ஆவின் நிறுவனம் இருவருக்குமே பால் சப்ளை செய்தது. பிறகு, பல மாதமாக எனக்கு பால் சப்ளையை நிறுத்திவிட்டது. தற்போது போராட்டம் அறிவித்ததால் எனக்கு மீண்டும் பால் சப்ளை செய்யப்படுகிறது. ஆவின் பொது மேலாளர் ராஜசேகர் கூறுகையில்: திருவெற்றியூர் ஆவின் விற்பனை நிலையம் சம்பந்தமாக எழுந்த புகாரின் பேரில் இருவரின் உரிமத்தையும் ரத்து செய்தோம். இருவரும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அதன் பிறகு இருவருக்குமே பால் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு முறையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
16-Sep-2024