உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மழை தண்ணீரை கொண்டு வந்த சிறு பாசன கண்மாய் திட்டம்

மழை தண்ணீரை கொண்டு வந்த சிறு பாசன கண்மாய் திட்டம்

திருப்புவனம்: திருப்புவனம் தாலுகா வில் சிறு பாசன கண்மாய் திட்டத்தால் துார் வாரப்பட்ட வலையனேந்தல் கண்மாய்க்கு மழை தண்ணீர் வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் 442 சிறு பாசன கண்மாய்கள் துார் வார 34 கோடியே 30 லட்சத்து 84 ஆயிரம் ரூபாய் ஒதுக்கப் பட்டது. திருப்புவனம் தாலுகாவில் 30 கண்மாய்களுக்கு இரண்டு கோடியே 77 லட்சத்து 69 ஆயிரம் ரூபாய் ஒதுக்கப்பட்டது. இதில் 45 ஏக்கர் பரப்பளவுள்ள வலையனேந்தல் கண்மாயும் ஒன்று. வைகை ஆற்றில் இருந்து ஊற்றுக் கால்வாய் மூலம் வலையனேந்தல் கண்மாய்க்கு தண்ணீர் வந்தது. சிறு பாசன கண்மாய் திட்டம் மூலம் அரசு ஒதுக்கிய நிதியில் கண்மாயில் உள்ள கருவேல மரங்கள் அகற்றப்பட்டு துார் வாரப்பட்டது. வரத்து கால்வாய் 200 மீட்டர் துாரம் தான் துார்வார முடியும். விவசாயிகளும் இணைந்து திருப்புவனம் நெல்முடிகரையில் இருந்து கண்மாய் வரை 400 மீட்டர் வரை துார் வாரி உள்ளனர். இதனால் கடந்த இரு நாட்களாக பெய்த மழை தண்ணீர் கண்மாய்க்கு வர துவங்கியுள்ளது. விவசாயி முத்துப்பாண்டி கூறுகையில், ஆறு பள்ளமாகவும் கால்வாய் மேடாகி விட்டதாலும் வலையனேந்தல் கண்மாய்க்கு தண்ணீர் வரவில்லை. வைகை ஆற்றில் இருந்து ஷட்டர்கள் அமைத்து ஊற்றுக் கால்வாயில் தண்ணீர் திறக்க வேண்டும் என விவ சாயிகள் பல ஆண்டு களாக கோரிக்கை விடுத்து வருகிறோம். தற்போது துார் வாருவதால் மழை தண்ணீர் கண்மாய்க்கு வருகிறது. விரைவில் வைகை ஆற்று தண்ணீரை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ