உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / தென்னிந்திய கால்பந்து கோழிக்கோடு முதலிடம்

தென்னிந்திய கால்பந்து கோழிக்கோடு முதலிடம்

காரைக்குடி: காரைக்குடி அழகப்பா பல்கலை உடற்கல்வியியல் இயக்குனரகம் மற்றும் இந்திய பல்கலை கூட்டமைப்பு சார்பில் தென்னிந்திய பல்கலைகளுக்கிடையேயான பெண்கள் கால்பந்து போட்டி அழகப்பா பல்கலை உடற்கல்வியியல் கல்லூரியில் நடந்தது. லீக் முறையில் நடந்த போட்டியில் கேரளா கோழிக்கோடு பல்கலை முதலிடத்தையும், சென்னை பல்கலை 2வது இடத்தையும், சென்னை வேல்ஸ் பல்கலை 3வது இடத்தையும், சிதம்பரம் அண்ணாமலை பல்கலை 4 வது இடத்தையும் பிடித்தது. இந்த நான்கு அணிகளும், பஞ்சாபில் நடைபெறும் அகில இந்திய அளவிலான போட்டியில் விளையாட உள்ளது.வெற்றி பெற்ற அணிகளுக்கு அழகப்பா பல்கலை துணைவேந்தர் ரவி கோப்பைகளை வழங்கினார். உடற்கல்வியியல் கல்லூரி முதல்வர் சுந்தர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். போட்டி ஏற்பாடுகளை உடற்கல்வி இயக்குனரக இயக்குனர் நாகராஜ் செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி