உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / தென்னிந்திய பல்கலை பெண்கள் கால்பந்து போட்டி

தென்னிந்திய பல்கலை பெண்கள் கால்பந்து போட்டி

காரைக்குடி : காரைக்குடி அழகப்பா பல்கலை உடற்கல்வியியல் இயக்குனரகம் மற்றும் இந்திய பல்கலை கூட்டமைப்பு சார்பில் தென்னிந்திய பல்கலை இடையேயான பெண்கள் கால்பந்து போட்டி துவக்க விழா நடந்தது.இப் போட்டியில் தென்னிந்திய அளவிலான 40க்கும் மேற்பட்ட பல்கலை அணிகள் கலந்து கொள்கின்றன. காரைக்குடி அழகப்பா பல்கலை உடற்கல்வியியல் கல்லுாரியில் நடைபெறும் போட்டிகளை அழகப்பா பல்கலை துணைவேந்தர் ரவி தொடங்கி வைத்தார். பல்கலை பதிவாளர் செந்தில்ராஜன் வரவேற்றார்.அழகப்பா பல்கலை சர்வதேச தடகள வீரரும், தேசிய பயிற்சியாளரான அன்னாவி பேசினார்.அழகப்பா பல்கலை ஆட்சிக் குழு உறுப்பினர் சேகர் வாழ்த்தினார். அழகப்பா பல்கலை உடற்கல்வியியல் கல்லுாரி முதல்வர் சுந்தர், பேராசிரியர்கள் முரளிராஜன், மணியழகு இந்திய பல்கலை கூட்டமைப்பின் பார்வையாளர் தியாகசந்தன் கலந்து கொண்டனர். போட்டிக்கான ஏற்பாடுகளை உடற்கல்வி இயக்குநரகத்தின் இயக்குனர் நாகராஜ் செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை