உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / சிவகங்கை நகர் போலீசாருக்கு எஸ்.பி., டி.எஸ்.பி.,பாராட்டு

சிவகங்கை நகர் போலீசாருக்கு எஸ்.பி., டி.எஸ்.பி.,பாராட்டு

சிவகங்கை: மாவட்டத்தில் சிறந்த போலீஸ் ஸ்டேஷனாக சிவகங்கை நகர் ஸ்டேஷனை தேர்வு செய்து சென்னையில் நடந்த விழாவில் டி.ஜி.பி., பொறுப்பு வெங்கடராமனிடம் விருது பெற்ற இன்ஸ்பெக்டர் அன்னராஜ் உள்ளிட்ட எஸ்.ஐ.,க்கள், போலீசாரை எஸ்.பி., சிவபிரசாத், டி.எஸ்.பி., அமலஅட்வின் பாராட்டினர். தமிழக அளவில் அதிக குற்ற வழக்குகளில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து, குற்றவாளிகளுக்கு நீதிமன்றம் மூலம் தண்டனை பெற்று தருதல், வாரன்ட் நிலுவை வழக்குகளை முடித்து வைத்தல் தொடர்ந்து குற்றங்கள் நிகழாமல் கண்காணித்தல் போன்று 26 விதமான செயல்களில் சிறந்து விளங்கியதற்காக சிவகங்கை மாவட்டத்தில் சிறந்த போலீஸ் ஸ்டேஷனாக தேர்வு செய்யப்பட்ட சிவகங்கை நகர் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் அன்னராஜ், டி.ஜி.பி.,யிடம் விருதை பெற்றார். சிவகங்கை நகர் போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் அன்னராஜ், எஸ்.ஐ.,க்கள், போலீசாரை எஸ்.பி., சிவபிரசாத், டி.எஸ்.பி., அமலஅட்வின் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ