மாற்றுத்திறனாளி அடையாள அட்டைக்கு சிறப்பு முகாம் கலெக்டர் தகவல்
சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் அனைத்து தாலுகா தலைமை மருத்துவமனைகளில் மாற்றுத்திறனாளி அடையாள அட்டை வழங்கப்படும் என கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்தார்.அவர் கூறியதாவது:மாற்றுத்திறனாளிகளுக்கு ஆன்லைன் மூலம் அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம், அந்தந்த தாலுகா தலைமை அரசு மருத்துவமனையில் நடைபெற உள்ளது. அதன்படி அக்.,22, 24 மற்றும் 26ல் மானாமதுரை, நவ.,5ல் இளையான்குடி, நவ.,7ல் திருப்புவனம், நவ.,12ல் சிங்கம்புணரி, நவ.,16 மற்றும் 19ல் திருப்புத்துார், நவ., 21ல் காளையார்கோவில், நவ., 26 மற்றும் 28, 29ல் காரைக்குடி, டிச.,5ல் தேவகோட்டை ஆகிய அனைத்து தாலுகா தலைமை அரசு மருத்துவமனையில் இம்முகாம் நடைபெறும். மாற்றுத்திறனாளிகள் www.swavlambancard.gov.inஎன்ற வெப்சைட் மூலம் பெயர், விபரங்களை அளித்து, ஒப்புகை சீட்டுடன் முகாமில் பங்கேற்கலாம் என்றார்.