உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / விளையாட்டுப் போட்டி பரிசளிப்பு விழா

விளையாட்டுப் போட்டி பரிசளிப்பு விழா

காரைக்குடி: காரைக்குடி செல்லப்பன் வித்யா மந்திர் பள்ளியில், முதல்வர் கோப்பை விளையாட்டுப் போட்டிக்கான பரிசளிப்பு விழா நடந்தது. சிவகங்கை மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் நடந்தது. பரிசளிப்பு விழா காரைக்குடி செல்லப்பன் வித்யா மந்திர் பள்ளியில் நடந்தது. கலெக்டர் பொற்கொடி தலைமையேற்றார். அமைச்சர் பெரியகருப்பன் பரிசுகள் வழங்கினார். எம் மாங்குடி எம்.எல்.ஏ., முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் ஏ.எஸ்.பி., ஆசிஷ் புனியா, காரைக்குடி மாநகராட்சி கமிஷனர் சங்கரன், மாவட்ட விளையாட்டு அலுவலர் ரமேஷ் கண்ணன், தாசில்தார் ராஜா செல்லப்பா வித்யா மந்திர் பள்ளி நிறுவனர் செல்லப்பன், தாளாளர் சத்யன், தொழிலதிபர் படிக்காசு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை