உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / சென்னையில் ஜன.29 - பிப்.1தபால் தலைகள் கண்காட்சி

சென்னையில் ஜன.29 - பிப்.1தபால் தலைகள் கண்காட்சி

சிவகங்கை:சென்னையில் ஜன., 29 முதல் பிப்., 1 வரை அணிவகுக்கும் தபால் தலை, அணைக்கும் நினைவலைகள்' என்ற வாசகத்துடன் மாநில அளவிலான தபால் தலைகள் கண்காட்சி நடக்கிறது.தமிழக தபால் துறை வட்டாரம் சார்பில் 14 வது மாநில அளவில் தபால் தலைகள் கண்காட்சி சென்னை செனாய் நகர் கம்யூனிட்டி ஹால் அம்மா அரங்கில் நடக்கவுள்ளது. நான்கு நாட்களுக்கு காலை 10:00 முதல் இரவு 7:00 மணி வரை நடக்கும் கண்காட்சி இடையே ஒவ்வொரு நாளும் பள்ளி மாணவர்களுக்கான கருத்தரங்கு, ஓவியம் கலை, ரங்கோலி, கட்டுரை, வினாடி வினா போட்டிகள் நடக்கும்.தமிழகம், புதுச்சேரியைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்கலாம். டிச., 9 க்குள் பதிவு செய்தவர்கள் மட்டுமே இக்கண்காட்சியில் பங்கேற்க முடியும். தகுதி அடிப்படையில் தங்கம், வெள்ளி, வெண்கல பதக்கம், பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்படும். தபால்துறையுடன் இணைந்து தென்னிந்திய தபால் தலைகள் சேமிப்பு கழகத்தினர் கண்காட்சி ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ