உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / அ.காளாப்பூரில் மாநில கபாடி போட்டி

அ.காளாப்பூரில் மாநில கபாடி போட்டி

சிங்கம்புணரி : சிங்கம்புணரி அருகே அ.காளாப்பூரில் மாநில கபாடி போட்டி நடந்தது.காளாப்பூர் வீரசண்டியர் கபாடி குழு சார்பில் நடந்த இப்போட்டியில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 39 அணிகள் பங்கேற்றன. ஒன்றியக்குழு தலைவர் திவ்யா பிரபு, அ.தி.மு.க., ஜெ.,பேரவை துணை செயலாளர் சசிகுமார், இளைஞர் பாசறை ஒன்றிய செயலாளர் ஜெயந்தன், ஊராட்சி மன்ற துணை தலைவர் விஜய், சுடர் ஆகியோர் போட்டிகளை துவக்கி வைத்தனர். முதல் பரிசை சிங்கம்புணரி அணியும், 2ம் பரிசை திண்டுக்கல் மாவட்டம் சமுத்திராப்பட்டி அணியும், 3ம் பரிசை புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அணியும், 4ம் பரிசை மதுரை மாவட்டம் வெள்ளினிப்பட்டி அணியும் பெற்றன. வெற்றி பெற்ற அணிகளுக்கு ரொக்கம், கோப்பை பரிசாக வழங்கப்பட்டது. சிறந்த ஆட்டக்காரர்களுக்கு கட்டில், அலைபேசி, அண்டா, சேவல் பரிசாக வழங்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !