மதுரை பஸ்களில் திருப்புத்துார் பயணிகளை ஏற்ற நடவடிக்கை
திருப்புத்தூர: மதுரையில் தனியார் பஸ்களில் திருப்புத்தூர் பயணிகளை அனுமதிக்காத பஸ் உரிமையாளர், கண்டக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என சிவகங்கை வட்டார போக்குவரத்து அலுவலர் கருப்பணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.மதுரை எம்.ஜி.ஆர்., மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்டில் தனியார் பஸ்களில் திருப்புத்துார் பயணிகளை அனுமதிக்கவில்லை என புகார் எழுந்தது. இந்நிலையில் பஸ் உரிமையாளர், கண்டக்டர், டிரைவர் ஆலோசனை கூட்டம் டி.எஸ்.பி., செல்வகுமார் தலைமையில் நடந்தது. சிவகங்கை வட்டார போக்குவரத்து அலுவலர் கருப்பணன் முன்னிலை வகித்தார்.கூட்டத்தில் மதுரையில் இருந்து திருப்புத்துார் வழியாக செல்லும் அனைத்து பஸ்களிலும் திருப்புத்துார் பயணிகளை ஏற்றி வரவேண்டும். எனவே பயணிகளை தனியார் பஸ் கண்டக்டர், டிரைவர்கள் கண்ணியமாக நடத்தவேண்டும். இதை மீறினால் மோட்டார் வாகன சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.