அரசு ஐ.டி.ஐ.,யில் மாணவர் சேர்க்கை
சிவகங்கை : சிவகங்கை அருகே முத்துப்பட்டி அரசு ஐ.டி.ஐ.,யில் 2025 ம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இங்கு பிட்டர், கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர் மற்றும் புரோகிராமிங் அசிஸ்டெண்ட், அட்வான்ஸ் சி.என்.சி., மெஷினிங் டெக்னீசியன், இண்டஸ்டிரியல் ரோபோடிக்ஸ் மற்றும் டிஜிடல் டெக்னீசியன், மெக்கானிக் எலக்ட்ரிக் வாகனம் ஆகிய தொழிற்பிரிவுகளில் காலியாக உள்ள இடங்களுக்கு நேரடி மாணவர் சேர்க்கை நடக்கிறது. செப்., 30 வரை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இப்பிரிவுகளில் சேர கட்டாயம் 10 ம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். அரசு ஐ.டி.ஐ.,க்கு நேரடியாக வந்து விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பத்துடன் அலைபேசி எண், இ- மெயில் முகவரி, மதிப்பெண், ஜாதி, மாற்று சான்று, பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, ஆதார் அட்டை நகலுடன் வர வேண்டும். பயிற்சியின் போது மாதம் ரூ.750 உதவி தொகை, இலவச பாட புத்தகம், சைக்கிள், சீருடை, காலணி, பஸ் பாஸ் வழங்கப்படும். புதுமை பெண், தமிழ்புதல்வன் திட்டத்தில் தகுதியுள்ள பயிற்சியாளர்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும். பயிற்சியின் போது தொழில்நிறுவனங்களில் பயிற்சி, அதற்கு பின் வேலைவாய்ப்பும் பெற்று தரப்படும்.