உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / இன்டர்நெட் இன்றி ைஹடெக் லேப்பை மாணவர்கள் பயன்படுத்த முடியவில்லை

இன்டர்நெட் இன்றி ைஹடெக் லேப்பை மாணவர்கள் பயன்படுத்த முடியவில்லை

சிவகங்கை: தமிழகத்தில் கிராமங்களில் உள்ள அரசு பள்ளிகளில் பி.எஸ்.என்.எல்., இணைய(இன்டர்நெட்) வசதி கிடைக்காததால் ைஹடெக் லேப்பை மாணவர்களால் பயன்படுத்த முடியவில்லை. அரசு பள்ளி மாணவர்களின் டிஜிட்டல் திறனை மேம்படுத்த 2018 – 2019 கல்வி ஆண்டில் உயர்நிலைப் பள்ளிகளில் ைஹடெக் லேப் துவங்கப்பட்டது. தற்போது 13 ஆயிரத்து 600 உயர், மேல்நிலை பள்ளிகளில் இந்த வசதி உள்ளது. உயர்நிலை பள்ளிகளுக்கு தலா 10, மேல்நிலை பள்ளிகளுக்கு தலா 20 கம்ப்யூட்டர்கள் வழங்கப்பட்டுள்ளன. ைஹடெக் லேப் மூலம் ஆன்லைன் பாடமும் நடக்கின்றன. இந்த வசதி நகர்ப்புற அரசு பள்ளி மாணவர்களுக்கு மட்டுமே கிடக்கிறது. கிராமப்புற மாணவர்களுக்கு லேப் இருந்தும் இணைய வசதி இல்லாததால் அவர்கள் ஹைடெக் லேப்பை பயன்படுத்த முடியவில்லை. ஆசிரியர்கள் கூறியதாவது: ஹைடெக் லேப் திட்டம் முறைப்படி துவங்கிய பின் அரசு வழங்கிய ரூ.1500 நிறுத்தப்பட்டது. பி.எஸ்.என்.எல்., இணைப்பை மட்டுமே கண்டிப்பாக அனைத்து அரசு பள்ளிகளும் பெற உத்தரவிட்டனர். நகர்ப்புறங்களில் பி.எஸ்.என்.எல்., இணைப்பு எளிதில் கொடுக்கப்பட்டது. கிராமப்புற பள்ளிகளுக்கு இணைப்பு கொடுக்க செலவு அதிகரிப்பதாக கூறி பி.எஸ்.என்.எல்., இணைப்பு கொடுக்க மறுக்கிறது. இதனால் லேப் ஆரம்பித்ததில் இருந்து மாணவர்கள் பயன்பாட்டிற்கு வராமல் கம்ப்யூட்டர்கள் அனைத்தும் பழுதாகி வருகிறது என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை