உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / சிங்கம்புணரி அருகே சத்துணவு சாப்பிட்ட மாணவர்கள் மயக்கம்

சிங்கம்புணரி அருகே சத்துணவு சாப்பிட்ட மாணவர்கள் மயக்கம்

சிங்கம்புணரி:சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே பள்ளியில் சத்துணவு சாப்பிட்ட 4 மாணவர்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது.எஸ்.எஸ்.கோட்டை அரசு துவக்கப்பள்ளியில் 77 மாணவர்கள் படிக்கின்றனர். நேற்று மதியம் இப்பள்ளியில் சத்துணவு வழங்கப்பட்டது. அதை உண்ட 4 பேருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டதாக திருப்புத்துார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். உணவில் முடி, கல் கிடந்ததால் மாணவர்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டதாக ஆசிரியர்கள் தெரிவித்தனர்.'சில மாணவர்களுக்கு உணவு ஒவ்வாமை ஏற்பட்டு லேசாக வாந்தி வந்தது. மற்றபடி உணவில் எந்த பிரச்னையும் இல்லை' என்று சத்துணவு அமைப்பாளர் முத்துலட்சுமி தெரிவித்தார்.தொடர்ந்து மூன்று நாட்களாக இப்பள்ளியில் இதே பிரச்னை நிலவி வந்து பெற்றோர், ஆசிரியர் கூட்டம் நடத்தி ஆலோசித்த நிலையில் நேற்றும் சம்பவம் நடந்துள்ளது. உணவு மாதிரி எடுக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. சிங்கம்புணரி தாசில்தார், போலீசார் விசாரித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி