உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / அரசு மருத்துவமனையில் தவிப்பு

அரசு மருத்துவமனையில் தவிப்பு

தேவகோட்டை; தேவகோட்டை அரசு மருத்துவமனையில் உரிய சிகிச்சைக்கு டாக்டர்கள் வராததால், பெரும்பாலான நோயாளிகள் தனியார் மருத்துவமனைக்கு செல்வதாக புகார் எழுந்துள்ளது. தேவகோட்டையில் நேற்று முன்தினம் மழை பெய்தபோது, பஞ்சு மரம் விழுந்து மீன் வியாபாரி சம்பவ இடத்தில் பலியானார். மேலும் 5 பேர் காயமுற்றனர். இவர்களை மீட்டு சிகிச்சைக்காக தேவகோட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு டாக்டர்களில்லை. ஒரு மணி நேரத்திற்கும் மேல் காத்திருக்க முடியாமல் காயம் அடைந்தோர் தனியார் மருத்துவமனைக்கு சென்றனர். விபத்து பகுதியை பார்வையிட சென்ற மாங்குடி எம்.எல்.ஏ., சிவகங்கை இணை இயக்குனரிடம் (மருத்துவம்) புகார் அளித்தார். அதற்கு பின்னர் ஒரு டாக்டர் மட்டுமே சிகிச்சை அளிக்க வந்ததால், ஆத்திரமுற்ற மக்கள் இது போன்று தொடர்ந்து நடக்கும் பிரச்னைகளுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ