நில அளவை துறை ஆர்ப்பாட்டம்
சிவகங்கை; நில அளவை துறையில் துணை ஆய்வாளர், ஆய்வாளர் சம்பள முரண்பாட்டை களைய வேண்டும் உட்பட 10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி சிவகங்கை கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் செய்தனர்.ஆர்ப்பாட்டத்திற்கு சங்க மாவட்ட தலைவர் வேல்முருகன் தலைமை வகித்தார். செயலாளர் கார்த்திக் முன்னிலை வகித்தார். மாவட்ட பொருளாளர் ஆனந்த் உட்பட அனைத்து மாவட்ட, நகர நிர்வாகிகள் பங்கேற்றனர். ஜூலை 15, 16 ஆகிய இரு நாட்களில் தற்செயல் விடுப்பு எடுத்து நில அளவை துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.வருவாய்துறையில் பணிபுரியும் 72 நில அளவையர்களில் 63 பேர் தற்செயல் விடுப்பு எடுத்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். நில அளவையர்களை ஒப்பந்த முறையில் பணிநியமிப்பதை தவிர்க்க வேண்டும். நில அளவை துறையில் ஏற்பட்டுள்ள காலிபணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உட்பட 10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி தற்செயல் விடுப்பு எடுத்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.