உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / சிவகங்கை அரசு பெண்கள் பள்ளியில் ஆசிரியர்கள், உறவினர் வாக்குவாதம்

சிவகங்கை அரசு பெண்கள் பள்ளியில் ஆசிரியர்கள், உறவினர் வாக்குவாதம்

சிவகங்கை:சிவகங்கை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர்கள், பயிற்சிஆசிரியர், அவர்களது உறவினர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. சிவகங்கை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 50க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். 30 பேர் தனியார் ஆசிரியர் பயிற்சி பள்ளியில் பயின்று இங்கு ஆசிரியர் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். பயிற்சி ஆசிரியை தாமரைச்செல்வியின் 2 மகள்கள் இதே பள்ளியில் 6ஆம் வகுப்பு படிக்கின்றனர்.அந்த குழந்தைகள் அக்., மாதம் இரண்டு நாள் பள்ளிக்கு தாமதமாக வந்துள்ளன. குழந்தைகளுக்கு வகுப்பு ஆசிரியர் அபராதம் விதித்து உடனடியாக கட்ட கூறியுள்ளார். இதில் ஆத்திரமடைந்த தாமரைசெல்வி மகள்களை அருகில் உள்ள மற்றொரு பள்ளியில் சேர்த்தார்.இந்த சம்பவம் நடந்து சில நாட்களான நிலையில் நேற்று மதியம் 3:00 மணிக்கு தலைமையாசிரியர் சிவமணி தலைமையில் பயிற்சி ஆசிரியர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது. இந்த ஆலோசனை தன்னை மையமாக வைத்து தான் நடந்தது என்று கருதிய பயிற்சி தாமரைச்செல்வி உறவினர்களை பள்ளிக்கு வரவைத்து ஆலோசனை தொடர்பாக கேட்க கூறியுள்ளார். அதேபோல் வேறு சில ஆசிரியர்களின் உறவினர்களும் பள்ளிக்கு வந்தனர். இதில் இரண்டு தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. மாணவிகள் அதிர்ச்சி அடைந்தனர். போலீசார் வந்து இருதரப்பையும் சமாதானம் செய்தனர்.தலைமையாசிரியர் கூறுகையில், நடந்த சம்பவம் குறித்து முதன்மை கல்வி அலுவலரிடம் தெரிவித்துள்ளேன். போலீசில் புகார் அளிக்க உள்ளேன் என்றார்.தாமரை செல்வி தரப்பு கூறுகையில், நாங்கள் எந்த பிரச்னையும் செய்யவில்லை. தலைமையாசிரியரிடம் அங்கு நடந்த ஆலோசனை கூட்டத்தில் என்ன பிரச்னை என்று கேட்கத்தான் சென்றோம். அதற்குள் அங்கு வந்தவர்கள் எங்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். நடந்தது குறித்து முதன்மை கல்வி அலுவலரிடம் கூறியுள்ளோம் என்றனர்.முதன்மை கல்வி அலுவலர் பாலுமுத்து கூறுகையில், நடந்த சம்பவம் குறித்து தற்போது தான் விசாரித்து கொண்டிருக்கிறேன். முழுவதும் விசாரித்த பின் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி