உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / ஆசிரியர் சங்கம் அரசுக்கு எச்சரிக்கை

ஆசிரியர் சங்கம் அரசுக்கு எச்சரிக்கை

சிவகங்கை:சாம்சங் தொழிலாளர்களுடன் தமிழக அரசு பேசி தீர்வு காணாவிட்டால் அரசுக்கு எதிராக ஆசிரியர் சங்கங்கள் போராட்டம் நடத்தும் என தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர்சங்க பொதுச் செயலாளர் சங்கர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.அவர் கூறுகையில், சாம்சங் தொழிலாளர்கள் தொழிற்சங்கம் அமைக்கும் அடிப்படை உரிமைக்காக செப்.,9 முதல் பல அடக்கு முறைகளைச் சந்தித்து கடுமையாகப் போராடி வருகின்றனர். அவர்களை இரவில் வீடு புகுந்து கைது செய்வது தமிழக அரசின் தொழிலாளர் விரோத போக்கை காட்டுகிறது. உடனே தமிழக அரசு இதனை கைவிட்டு சாம்சங் ஊழியர்களை உடனடியாக அழைத்து பேசி தீர்வு காண வேண்டும். அடக்கு முறையை கையாண்டால் ஆசிரியர் சங்கங்கள் அனைத்தும் தமிழக அரசுக்கு எதிராக போராட்டம் உள்ளிட்ட இயக்க நடவடிக்கை மேற்கொள்ள நேரிடும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ