உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / கோயில் கும்பாபிஷேகம்

கோயில் கும்பாபிஷேகம்

தேவகோட்டை: தேவகோட்டையில் முன்னாள் சுப்ரீம் கோர்ட் நீதிபதி ஏ.ஆர்.லட்சுமணன் ஷீரடி சாய்பாபா கோயில் அமைத்தார். இக்கோயிலில் பல்வேறு திருப்பணி நடந்தது. ராஜபுரம் சபேச சிவாச்சாரியார் தலைமையில் கணபதி ஹோமம், இரண்டு கால யாக சாலை பூஜை நடந்தன. நேற்று காலை 6:00 மணியளவில் கும்பாபிஷேகமும் தொடர்ந்து விநாயகர், சாய்பாபாவிற்கும் மகா அபிஷேகங்கள் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.கோயில் நிர்வாக அறங்காவலர் ஏஆர்.எல். அருணாசலம், வக்கீல் ஏஆர்.எல். சுந்தரேசன் குடும்பத்தினர் ஏற்பாடுகளை செய்தனர். முன்னாள் சென்னை ஐகோர்ட் நீதிபதி கண்ணதாசன், புதுக்கோட்டை திலகவதியார் ஆதினம், கோவிலூர் நாராயண ஞான தேசிக சுவாமிகள், எம்.எல்.ஏ.க்கள் செந்தில்நாதன், மாங்குடி, நகராட்சி தலைவர் சுந்தரலிங்கம் பங்கேற்றனர்.

திருப்புத்துார்

பூலாங்குறிச்சி வீரமுக விநாயகர் கோயிலில் கும்பாபிேஷகம் நடந்தது. தற்போது இக்கோயில் கற்கோயிலாக புனரமைக்கும் திருப்பணி நடந்தது. கும்பாபிேஷகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜை ஜூலை 13 காலை துவங்கியது. மாலையில் முதற்கால யாக பூஜை நடந்து பூர்ணாகுதி தீபாராதனை நடந்தது.நேற்று காலை 7:15 மணிக்கு விநாயகர்,கோ பூஜை நடந்து இரண்டாம் காலயாக பூஜை துவங்கியது. யாகபூஜை நிறைவடைந்து கலசங்கள் யாகசாலையிலிருந்து காலை 9:15 மணிக்கு புறப்பாடு ஆனது. தொடர்ந்து கலசங்களில் புனித நீரால் கும்பாபிேஷகம் நடந்தது. சிங்கப்பூர் உள்துறை அமைச்சர் சண்முகம் பங்கேற்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை