குண்டும் குழியுமான பனங்காடி ரோடு
சிவகங்கை: சிவகங்கையில் இருந்து 7 கி.மீ.,துாரத்தில் பனங்காடி கிராமம் உள்ளது. இங்கு 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். பனங்காடி கிராமத்திற்கு சிவகங்கை ரோஸ் நகர் வழியாகவும், நாட்டரசன்கோட்டை அருகே தொண்டி சாலையை இணைக்கும் வகையிலும் ரோடு அமைந்துள்ளது. பனங்காடி மக்கள் சிவகங்கை உள்ளிட்ட பிற பகுதிகளுக்கு செல்ல ரோஸ் நகர் பாதையும், நாட்டரசன் கோட்டை, காளையார்கோவில் உள்ளிட்ட பகுதிக்கு செல்ல தொண்டி இணைப்பு பாதையையும் பயன்படுத்தி வருகின்றனர். கடந்த 5 மாதங்களாக ரோஸ் நகர் வழியாக செல்லக்கூடிய ரோட்டில் பால வேலை நடைபெறுகிறது. இதனால் அல்லுார் பகுதியில் சாலை துண்டிக்கப்பட்டுள்ளது. இந்த பகுதி மக்கள் தொண்டி இணைப்பு பாதையை தான் பயன்படுத்துகின்றனர். இந்த ரோடு முழுவதும் சேதம் அடைந்துள்ளது.