குடிநீர் குழாய்கள் சேதம் மாற்ற பேரூராட்சி முடிவு
திருப்புத்துார்: திருப்புத்துாரில் குடிநீர் திட்டத்தில் சேதமடைந்த குழாய்களை அம்ரூத் திட்டத்தில் மாற்ற பேரூராட்சியினர் திட்டமிட்டுள்ளனர்.திருப்புத்துாரில் காவிரி குடிநீர் திட்டத்தில் தரைமட்டத் தொட்டியிலிருந்து சிவகங்கை ரோட்டிலுள்ள மேல்நிலைத்தொட்டிக்கு செல்லும் குழாய்கள் 17 ஆண்டுகளாகி விட்டதால்சேதமடைந்து குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. நேற்று கூட புதுக்கோட்டை ரோட்டில் சேதமடைந்த குழாய் பராமரிப்பு பணி நடந்தது.சேதமடைந்த குழாய்களை மாற்றி புதிய குழாய்கள் பதிக்க குடிநீர் வாரியம் திட்டமிட்டது. இந்நிலையில் பேரூராட்சியினர் அம்ரூத் குடிநீர் திட்டத்திலேயே இக்குழாய்களை மாற்ற திட்டமிட்டுள்ளனர்.புதுப்பட்டி தரை மட்டத் தொட்டியிலிருந்து குறுகிய பாதையில் அதிக வளைவு இல்லாத புதிய பாதையில் குழாய்கள் பதிக்க திட்டமிடப்பட்டுள்ளது.