உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / கரைந்து வரும் அரசு ஆரம்ப சுகாதார நிலைய சுவர்

கரைந்து வரும் அரசு ஆரம்ப சுகாதார நிலைய சுவர்

திருப்பாச்சேத்தி : திருப்பாச்சேத்தி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கட்டப்பட்டு ஐந்து ஆண்டுகளே ஆன நிலையில் சுவர் பெயர்ந்து கரைந்து வருகிறது.திருப்பாச்சேத்தி மற்றும் சுற்றுவட்டார கிராமமக்கள் பயன்பாட்டிற்காக 71 லட்சத்து 61 ஆயிரம் ரூபாய் செலவில் 2020ல் திருப்பாச்சேத்தியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சொந்த கட்டடத்தில் தொடங்கப்பட்டது. ஒரு டாக்டர், இரண்டு செவிலியர், மருந்தாளுனர்,உதவியாளர் உள்ளிட்டோர்களுடன் ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. தினசரி 100 முதல் 200 பேர் வரை புறநோயாளிகளாக சிகிச்சை பெறுகின்றனர். இதுதவிர கர்ப்பிணிகளுக்கு மருத்துவ பரிசோதனை, தடுப்பூசி உள்ளிட்டவைகளும் வழங்கப்பட்டு வருகின்றன.அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கட்டப்பட்டு ஐந்து ஆண்டுகளே ஆன நிலையில் கட்டடத்தின் வெளிப்புற சுவர் அனைத்தும் அரிக்கப்பட்டு சிமென்ட் கற்கள் வெளியே தெரிகின்றன. கட்டடத்தின் அஸ்திவாரமும் அரிக்கப்பட்டுள்ளதால் கட்டடத்தின் ஸ்திரத்தன்மை கேள்விக்குறியதாக மாறி வருகிறது. மழை காலத்தில் சுவர் அனைத்தும் ஈரமாகி விடுவதால் மின்கசிவு ஏற்படவும் வாய்ப்புள்ளது. தரைத்தளத்தில் உள்ள டைல்ஸ் கற்கள் சரியாக பொருந்தாததால் நடக்கும் போது நோயாளிகள் தடுமாறுகின்றனர். ஆரம்ப சுகாதார நிலைய கட்டடம் சேதமடைந்து வருவது குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் முறையிட்டும் எந்த வித நடவடிக்கையும் இல்லை. எனவே விபரீதம் ஏற்படும் முன் கட்டடத்தை பழுதுபார்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ