உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / நள்ளிரவு வரை வீட்டின் முன் அமர்ந்து தனியார் நிதி நிறுவனத்தினர் அடாவடி

நள்ளிரவு வரை வீட்டின் முன் அமர்ந்து தனியார் நிதி நிறுவனத்தினர் அடாவடி

இளையான்குடி: இளையான்குடி சுற்று வட்டார கிராமங்களில் தவணையை செலுத்த கூறி நள்ளிரவு வரை வீட்டின் முன்பாக அமர்ந்து தனியார் நிதி நிறுவனத்தினர் அடாவடி செய்வதாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.இளையான்குடி ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட கிராமங்களில் பெரும்பாலும் விவசாயத்தையே முதன்மையான தொழிலாக செய்து வருகின்றனர். ஏராளமான தனியார் நிதி நிறுவனங்களை சேர்ந்த ஊழியர்கள் கிராம மக்களிடம் குறைந்த வட்டிக்கு கடன் தருவதாக கூறி ரூ.1லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை கடன் கொடுக்கின்றனர். இளையான்குடி அருகே உள்ள செங்குடி கிராம மக்கள் கூறியதாவது: தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் விவசாயிகளான எங்களிடம் பணம் தேவையான விவசாய காலங்களில் வீடுகளுக்கு நேரடியாக வந்து கடன் வழங்குகின்றனர்.நாங்களும் எங்களால் முடிந்தவரை தவணை தேதி தவறாமல் கடனை கட்டி வருகிறோம். ஒரு சில மாதத்தில் தவணைத் தேதியன்று கடனை கட்ட முடியாத சூழ்நிலை ஏற்படும் போது ஊழியர்கள் வீட்டிற்கு முன் அமர்ந்து கொண்டு அவதுாறாக பேசுவதோடு மட்டுமில்லாமல், அடாவடி செய்கின்றனர்.ஆகவே மாவட்ட நிர்வாகம் அடாவடி செய்யும் தனியார் நிதி நிறுவனத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ